தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 31, 2013

மாமனிதர் நபிகளாரை மக்களுக்கு அறிமுகம் செய்வோம்!

டிச.31:டெல்லி முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் தனக்கு அரசு சலுகைகள் வேண்டாம்; பாதுகாப்பு வேண்டாம்; அரசாங்கம் தரும் வீடு வேண்டாம் என்று சொல்லியுள்ளதை சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஒரு தலைவர் நமக்கு கிடைக்கமாட்டாரா என்று மக்கள் ஏங்குவதாக பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. பலர் அவ்வாறு பேசியும் வருகின்றார்கள்.

video

ஒரு யூனியன் பிரதெசத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள கெஜ்ரிவால் இவ்வாறு சொன்னதை அதிசயமாக பார்க்கும் இவர்களுக்கு உலகின் வல்லரசின் அதிபதியாக திகழ்ந்த அதே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்களின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை தெரியவில்லை போலும்.

நபிகளாரின் எளிமை
நபிகளாரின் அடக்கம்
நபிகளாரின் வறுமை
நபிகளாரின் ஆட்சித்திறமை

என்று இப்படி நபிகள் நாயகத்தின் வியத்தகு வாழ்க்கை முறையை அறியாததால் தான் இவர்கள் இப்படி பேசி வருகின்றார்கள்.

இவ்வாறு பிறமத சகோதரர்களுக்கு கெஜ்ரிவால் எலக்ட்ரிக் ட்ரெயினில் போவது அதிசயமாக தெரிவதற்கும், ராகுல் காந்தியை கொசு கடித்தது அதிசயமாக தெரிவதற்கும் காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை முஸ்லிம்கள் முறையாக பிறமத மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்காததுதான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

அத்தகைய மாமனிதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை மக்களுக்கு அறிமுகம் செய்வோம் எனபது பற்றி விவரிக்கின்றது. இன்றைய தினம் ஒரு தகவல்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More