தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 22, 2014

ஜனவரி 28: பள்ளிகளுக்கு கோரிக்கை!

பரங்கிப்பேட்டை,ஜன.22: இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 28 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரியும், மாநிலத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தக்கோரியும் “சிறை செல்லும் போராட்டம்” சென்னை, நெல்லை, கோவை, திருச்சி, புதுவை, காரைக்கால், மும்பை  நடைபெறுகின்றது.


இந்த போராட்டத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ள ஏதுவாக பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிக்களுக்கு அன்றைய தினம் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு விடுப்பு தருமாறும் மற்றும் அந்நாளில் தேர்வுகள் ஏதேனும் இருந்தால் மாற்று ஏற்பாடு செய்யவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை கடிதம் இன்று (22.01.2014) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

வழங்கப்பட்ட கடிதம்

அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - பரங்கிப்பேட்டை
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - பரங்கிப்பேட்டை

 அரசு ஊராட்சி கும்த்துப்பள்ளி - பரங்கிப்பேட்டை

மூனா ஆஸ்திரேலியன் பள்ளி - பரங்கிப்பேட்டை
சேவாமந்திர் பள்ளி - பரங்கிப்பேட்டை
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி - பரங்கிப்பேட்டை 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More