தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 07, 2014

உரிமையுடன் அழைக்கின்றோம்...

ஜன.07: இந்த சிறைசெல்லும் போராட்டம் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல, ஒட்டு மொத்த முஸ்லிம்களும் முன்னேறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. 


அனைத்துத் தரப்பு முஸ்லிம்களுக்காகவும் நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில் நாம் அனைவரும் கலந்துகொண்டு அரசுக்கு நமது குரலை உரக்கச் சொல்லவேண்டும்.இடஒதுக்கீடு கிடைத்தால் அனைத்துத்தரப்பு முஸ்லிம்களும் பயன் அடைவார்கள்.

கடந்த காலங்களில் வீரியமிக்க பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி இருந்தும் அரசியல் ஆதாயம் தேடாத அமைப்பு டிஎன்டிஜே. அனைத்து முஸ்லிகளுக்காகவும் பாடுபடும் அமைப்பு டிஎன்டிஜேதான். 

கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவதும், உதவி செய்வதும் டிஎன்டிஜே. கொள்கை வேறுபாடு பார்க்காமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக செய்துவரும் டிஎன்டிஜேவின் சேவைகள் தாங்கள் அறிந்ததே.

இரத்ததான சேவையில் முதலிடம் பெற்று பல்வேறு விருதுகளைப் பெற்ற அமைப்பு டிஎன்டிஜே. சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக இதுவரையிலும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தி உள்ளோம், தொடர்ந்தும் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் பல்வேறு உதவிகளையும் கொள்கை வேறுபாடு பார்க்காமல் செய்து வருகின்றோம். எந்நேரமும் முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துவரும் டிஎன்டிஜே எந்தப்பணி செய்தாலும் கூலியைஅல்லாஹ்விடம் மட்டுமே பெறுவோம் என்ற கொள்கையில் உள்ளது.

சுயநலம் இல்லாமல் முழுக்க முழுக்க சமுதாயநலன் கருதியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. நாங்கள் மாநாடு நடத்தி, கூட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளிடம், சீட்டோ, நோட்டோ வாங்கமாட்டோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முஸ்லிம்கள் நல்லபடியாக வாழவேண்டும் என முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக்கொன்றும், சிறையில் அடைக்கும் ஆபத்தான வாழ்க்கையை விட்டும், மனைவி மக்களைப்பிரிந்து அயல் நாட்டில் வாழும் அடிமை வாழ்க்கை.

இப்படி வாழவழியில்லாமல் இருக்கும் நமது சமுதாயமும், கலெக்டராக, கமிஷனராக, டாக்டராக, பொறியாளராக, நீதிபதியாக மாறுவதற்கு, நாம் நமது நியாயமான கோரிக்கையை அரசுக்குத் தெரிவிக்கவேண்டும். ஒருவராக, இருவராகச் சொன்னால் அரசின் காதுகளுக்குக் கேட்காது.ஒட்டுமொத்தமாக சொன்னால்தான் அரசுகளின் காதுகளுக்குச்செல்லும். ஒருமித்து ஒரேகுரலில் நமது கோரிக்கையை வெல்ல ஜனவரி 28 அன்று சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் நடக்கவிருக்கும் போராட்டக்களங்களுக்கு வருமாறு தங்களை உரிமையுடன் அழைக்கின்றோம்.

நமது நியாயமான கோரிக்கையை அரசுக்கு உரக்கச் சொல்லுவோம், இடஒதுக்கீட்டை வெல்வோம். இன்ஷாஅல்லாஹ்!!

இப்படிக்கு,
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் [ TNTJ ] ,
பரங்கிப்பேட்டை கிளை.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More