தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 19, 2014

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் அதிமுக-வினர் சந்திப்பு!

சிதம்பரம், மார்ச்.19: தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்து தர பிற்ப்படுத்தப்பட்டோர் ஆனனயத்திற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த நாடளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்ற 19.03.2014 அன்று அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கலைமணி மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்-க்கு வருகை தந்து நமது மாவட்ட கிளை நிர்வாகிகளை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பில் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் நமது தேர்தல் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.

பிறகு அவர்களுக்கு மார்க்க விளக்க நூல்கள் மற்றும் உணர்வு வார இதழ் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

இதில் நமது பரங்கிப்பேட்டை கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More