தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 22, 2014

இடஒதுக்கீடு வினாக்களும் விடைகளும்!

மார்ச்.22: அன்பிற்க்கினிய சகோதர சகோதரிகளே இட ஒதுக்கீடு அதிகப்படுத்தி தர பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிற்ப்படுத்தபட்ட வகுப்பினர் ஆனையத்திற்க்கு உத்தரவு பிறபித்த காரணத்தால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அணியை ஆதரிப்பது என்று TNTJ முடிவு எடுத்தவுடன் அதிகப்படியான விமர்சணங்களை சந்தித்து வருகின்றது.


அந்த விமர்சங்களுக்கு அழகான முறையில் டி.என்.டி.ஜே மாநில தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கம் அளித்து இருந்தாலும் அந்த விடியோவை எல்லாம் பார்க்க மணம் இல்லாத சிலர் எங்களுக்கு இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் வேண்டும் என்று ஒன்பது கேள்விகளை முன் வைத்தனர் அந்த ஒன்பது கேள்விகளுக்கும் அழகான முறையில் விளக்கம் கீழே உள்ள லிங்கில் நீங்கள் பார்க்கலாம்.


நமது ஊர் பரங்கிப்பேட்டையை சார்ந்த சகோதரர்களை பொருத்த வரை ஒரு சிலர் இதே கேள்விகளை காப்பி பேஸ்ட் செய்து எங்களுக்கு இதற்க்கு பதில் தர வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பினர். இதில் போலியாக அதாவது ஊர் பெயர் தெரியாத போலி முகத்துடன் கோழைகள் போல் கூட வந்து இதனை பதிவிட்டனர் இவர்களை நாம் கண்டு கொள்வதாக இருந்தாலும் தனது உன்மை அடையாளத்துடன் பதிவிட்ட சகோதரர்களுக்காக இதனை இங்கு பதிவிடுகின்றேன்.

அவர்கள் காப்பி பேஸ்ட் செய்து பதிவிட்ட கேள்விகள் இதோ உங்கள் பார்வைக்காக...

1.ஆணையம் யார் தலைமையில் ஏற்ப்படுத்தப்பட்டது?
2.அந்த ஆணையத்தின் தலைவர் யார்?( ex: சச்சார், மிஸ்ரா,)
3.ஆணையத்தின் காலக்கெடு

4. அரசிதழில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளதா
5.பிரச்சாரத்தில் ஜெ.கூட பிற்ப்படுத்தப்பட்டோருக்கு கடிதாசி என்று தானே சொல்கிறார். பின்னர் நீங்கள் ஏன் ஆணையம் என கூறுகிறீர்கள்.
7.நீங்கள் கவுண்டவுன் நாள் கொடுத்த கடைசி தேதி வரையிலும் எந்த அறிவிப்பும் வரவில்லையே
8.மிஸ்ரா கமிஷன் மாநிலங்களுக்கும் சேர்த்து தானே பரிந்துரை செய்தது. அதனடிப்படையிலும் இடஒதுக்கீடு அளித்திருக்கலாமே
9.ஆணையம் இடஒதுக்கீடு விசயத்தில் எதனை மையமாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது?


மேலே உள்ள அனைத்து கேள்விகளையும் நீங்களே ஒரு முறை பார்த்தாலே உங்கள் மனதில் ஒரு நிதர்சனமான உன்மையை அதாவது டி.என்.டி.ஜே விடம் இருந்து இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் பெற வேண்டும் என்பது இவர்களின் நோக்கம் இல்லை மாறாக டி.என்.டி.ஜே வின் முடிவை விமர்சிக்க வேண்டும் என்றே நோக்கத்தில் தான் இதனை பதிவிட்டார்கள் என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

பதில் தருவதற்க்கு முன்னாள் உதாரணத்திற்கு இவர்களின் நோக்கம் டி.என்.டி.ஜே வின் முடிவை விமர்சிப்பது ஒன்று தான் நோக்கம் என்பதற்க்கு ஒரு உதாரனத்தை உங்களுக்கு எடுத்து காட்ட விரும்புகின்றேன்.

அதாவது ஒன்றாவது கேள்வியையும் இரண்டாவது கேள்வியையும் நீங்கள் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும் "ஆணையம் யார் தலைமையில் ஏற்ப்படுத்தப்பட்டது? " என்றாலும் " அந்த ஆணையத்தின் தலைவர் யார்? " என்றதும் ஒரே கேள்வி தான் என்பதை இதை காப்பி பேஸ்ட் செய்தவர்கள் கவணிக்காதது தான் வேடிக்கை.

இப்போது பதிலுக்கு வருவோம்..

1.ஆணையம் யார் தலைமையில் ஏற்ப்படுத்தப்பட்டது?
யார் தலைமையில் என்று கூறுவதற்க்கு முன்னால் ஒரு சிறிய செய்தியை உங்கள் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிய வைக்க ஆசைபடுகின்றேன். பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் நிரந்தரமாக ஒரு ஆனையம் இருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமண்றத்தின் தீர்ப்பு.

தமிழகத்தை பொருத்த வரை ஏற்க்கனவே பிற்ப்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்க்கு என்று ஒரு ஆனையம் இருக்கின்றது . இந்த ஆனையத்தின் பரிந்துறையின் பெயரில் தான் நமக்கு கிடைத்த 3.5 % இட ஒதுக்கீடு கூட கிடைத்து இருக்கின்றது என்பதையும் இங்கு கூற கடமைபட்டுள்ளேன். அந்த ஆனையம் அதிமுக ஆட்சியில் அமைக்கபட்டது இல்லை திமுக ஆட்சியில் அமைக்கபட்டு அந்த ஆனையம் சமர்பித்த பரிந்துரையின் அடிபடையில் தான் திமுக ஆட்சியில் 3.5 % இட ஒதுகீடும் வழங்கபட்டது. இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை டி.என்.டி.ஜே ஆதரித்தது என்பதும் குறிப்பிட தக்கது.

திமுக ஆட்சியில் அமைக்கபட்ட ஆனையம் நீதிபது ஜனார்தனன் தலைமையில் அமைக்கபட்டது ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் அவரே தான் இந்த நிரந்தர ஆனையத்தின் தலைவராக செயல்பட்டு வருகின்றார்.

இட ஒதுகீட்டை முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்று நிறைய ஆய்வுகளை செய்து வழியுறுத்தியவர் தான் இவர் என்பதும் உங்களுக்கு சுட்டி காட்டபட வேண்டிய செய்தி.

2.அந்த ஆணையத்தின் தலைவர் யார் ?( ex: சச்சார், மிஸ்ரா,)
முன்பே குறிப்பிட்டது போல் முதல் கேள்வியும் இரண்டாவது ஒன்று தான் காப்பி பேஸ்ட் செய்து இந்த கேள்வியை பதிவிட்டவர்கள் இதனை கவனிக்கவில்லை போல இதற்க்கான பதிலை முதல் கேள்வியின் பதிலில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


3.ஆணையத்தின் காலக்கெடு ?  
ஆனையத்தின் கால கெடுவை பொருத்த வரை குறிப்பிட்டு எந்த ஒரு கால கெடுவும் இல்லை நீதிபதி ஜனார்தனன் தலைமையிலான ஆனையம் இவர் ஓய்வு பெறும் வரையில் இருக்கும் அல்லது அவர் அந்த ஆனையத்தின் பொருப்பில் இருந்து தன்னிச்சையாக விளகும் வரை இருக்கும்.

நீதிபதி ஜனார்தனன் தலைமையில் செயல்படும் இந்த ஆனையத்திற்க்கு தமிழக அரசின் உத்தரவை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அதில் மிக தெளிவாக ஒரு வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்பதை காண முடியும்.

அதாவது " இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த தக்க காரண காரியங்களை ஆய்வு செய்து தமிழக அரசிடம் மிக குறுகிய காலத்தில் பரிந்துரைகளை சமர்பிக்க வேண்டும் " என்ற வார்த்தை அதாவது மற்ற ஆய்வுகளை போல இல்லாமல் இந்த பரிந்துரையை குறுகிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆனையாக இது உள்ளது.

நீதிபதி ஜனாதனனை பொருத்தவரை அவர் ஏற்க்கனவே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வழியுறுத்தியவர் அவர் இதற்க்கு மேல் இட ஒதுக்கீட்டை கூட்டி தர வேண்டும் என்ற காரணத்தை மட்டும் ஆராய்ந்து அறிக்கை அளித்தால் போதுமானதாக அமையும்.


4. அரசிதழில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளதா


நீங்கள் தமிழக அரசின் அதிகாரபூர்வமாண இனையதளத்தில் GOs of Public Interest அதாவது அரசானை என்ற பிரிவில் சென்றீர்கள் என்றால் தமிழக அரசு பிற்ப்படுத்தபட்ட ஆனையதிற்க்கு உத்தரவிட்டதை நம்மால் பார்க்க இயலும். உங்கள் பார்வைக்காக கீழே உள்ள லிங்க்..5.பிரச்சாரத்தில் ஜெ.கூட பிற்ப்படுத்தப்பட்டோருக்கு கடிதாசி என்று தானே சொல்கிறார். பின்னர் நீங்கள் ஏன் ஆணையம் என கூறுகிறீர்கள்.


ஏற்க்கனவே கூறியப்படி நிரந்தரமான தமிழகத்தில் உள்ள பிற்ப்படுத்தபட்டோர் ஆனையத்திற்கு தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த தக்க காரண காரியங்களை ஆராய்ந்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற அரசின் ஆனையை கடிதம் மூலம் ஆனையத்திற்க்கு தெரிவித்து இருக்கின்றது.

7.நீங்கள் கவுண்டவுன் நாள் கொடுத்த கடைசி தேதி வரையிலும் எந்த அறிவிப்பும் வரவில்லையே

இந்த கேள்வியே முதலில் தவறானது நாம் கவுன்டன் கொடுத்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்க்கு முன்னால் என்று தான் நாம் அறிவிப்பை வைத்தோம். இந்த ஆனையத்திற்க்கு தமிழக அரசு உத்தரவிட்டதும் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்க்கு முன்னால் தான் என்பதையும் தெளிவாக தெரிவித்து கொள்கின்றேன்.8.மிஸ்ரா கமிஷன் மாநிலங்களுக்கும் சேர்த்து தானே பரிந்துரை செய்தது. அதனடிப்படையிலும் இடஒதுக்கீடு அளித்திருக்கலாமே.

நீதிபதி ரங்கநாத் மிஷ்ராவை மற்றும் நீதிபதி இராஜேந்திர சச்சாரின் தலைமையில் அமைக்கபட்ட ஆனையங்களை பொருத்தவரை மத்திய அரசால் முஸ்லீம்களுக்கு மத்தியில் இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்பதற்க்கு அமைக்கபட்டது.

அதே சமயம் இந்த ஆனையங்கள் மாநில அரசாங்கத்திற்க்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கி இருப்பது உன்மை தான் ஆனால் அதனை வைத்து கொண்டு மாநில அரசாங்கம் இடஒதுக்கீடு வழங்குவதோ அல்லது உயர்த்தி தருவது என்பது சட்ட சிக்கல் கொண்டதாக அமையும்.

உதாரணமாக மாநிலத்தில் ஆனையம் அமைக்காமல் ஆந்திர மாநிலத்தில் இராஜசேகர ரெட்டி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அளித்தார். ஆனால் ஒரு சிலர் கயவர்கள் தொடர்ந்த வழக்கால் இன்று அந்த இட ஒதுக்கீடு கிடப்பில் போடபட்டுள்ளதை உங்கள் நியாபகத்திற்க்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

இந்த இட ஒதுகீடு அளித்த போது இராஜேந்திர சச்சார் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்து இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிட தக்க விஷயம்.9.ஆணையம் இடஒதுக்கீடு விசயத்தில் எதனை மையமாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது?

இட ஒதுக்கீடாக இருந்தாலும் ஆனையமாக இருந்தாலும் முதலில் சட்ட சிக்கல்கள் இல்லாமல் நமக்கு கிடைக்கபட வேண்டும் என்ற ஒரே கருத்தை மனதில் வைத்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு எடுத்துள்ளது.

அரசின் ஆனையத்தை பொருத்தவரை ஆய்வுகள் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக அமைந்து இருக்கும்.

·         பொது மக்களின் உணர்வு மற்றும் முஸ்லீம்களை பற்றிய கண்னோட்டம்.
·         முஸ்லிம் மக்கள் தொகை அளவு, விநியோகம் மற்றும் சுகாதார நிலைமை.
·         முஸ்லிம்களின் கல்வி நிலை.
·         பொருளாதாரம் மற்றும் வேலைவாய்பு நிலை.
·         முஸ்லிம்களின் வாழ்க்கை தரம்.
·         முஸ்லீம் சமூகத்தின் அவலம் மற்றும் உட்கட்டமைப்பு.
·         அரசு துறைகளில் முஸ்லீம்கள்.

என்று பல கோனங்களில் ஆனையங்களால் ஆய்வு செய்யபடும்.

- பரங்கிப்பேட்டை கலீல்லூர் ரஹ்மான்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More