தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 30, 2014

கவலை எப்படி மனிதனுக்கு பரிசாக அமையும்?

மார்ச்.30: ஆம், அதுவும் உண்மை தான் என விஞ்ஞானம் சொல்கிறது,தெரிந்தோ தெரியாமலோ மனிதனின் ஆழ் மனமும் இதை அங்கீகரிக்கிறது !

சோதனை ஒன்றை மனிதன் சந்திக்கையில், அதை சகித்துக் கொள்ள இயலாமல் திண்டாடுகிறான்.

சில சோதனைகள் உடனே நீக்கப்படும், சில சோதனைகள் பல காலங்கள் நீளும்.
பல காலம் ஒரு சோதனையை உள்ளத்தில் பூட்டி வைக்க மனிதன் சிரமப்படுவான். 

அத்தகைய சூழலில் அவனுக்கு அருமருந்தாய் அமைவது அவன் எதிர்பாராத, அதை விட பெரியதான மற்றொரு சோதனை தான் !

அவன் எதிர்பாராத மற்றொரு பெரிய சோதனை ஒன்றை அவன் சந்திக்க நேரும் போது, அது நாள் வரை தம்மால் தாங்க இயலாததாக அவன் கருதி வந்த முந்தைய சோதனையானது அவனுக்கு மிக இலேசானதாக மாறி விடும் ; 
அதை எதிர்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அவனுக்கு கிடைத்து விடும் !

மனோதத்துவ ரீதியிலான இந்த ஆய்வை 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் அறிவித்து விட்டது !

உஹது போரின்போது நபி (சல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று பரப்பப்பட்ட புரளியானது, போரில் அடைந்த தோல்வியின் மனரீதியான பாதிப்பை சஹாபாக்களுக்கு குறைக்க உதவியது என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.

உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். (3:153)

கவலையும் தோல்வியும் கூட சில நேரங்களில் பரிசு தான்! நாம் செய்ய வேண்டியதெல்லாம் ..
அதை தருவது நம்மைப் படைத்த இறைவன் என்று பொறுமை காக்க வேண்டும், அவ்வளவு தான்!!

நன்றி: நாஷித் அஹ்மத்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More