தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 06, 2014

ஜனாஸாவை அடக்கம் செய்யவிடாமல் பின்னத்தூர் சுன்னத் (?) ஜமாஅத்தினர் அராஜகம்!


பின்னத்தூர், மார்ச்.06: கடலூர் மாவட்டம் பின்னத்தூர் (பரங்கிப்பேட்டை + சிதம்பரம் அருகே) கடந்த 04.03.2014 நமது கொள்கை சகோதரர் ஒருவரின் தாயார் மரணித்து விட்டார்கள். அவர்களின் மையத்தை நபிவழிப்படி அடக்கம் செய்ய மறுத்த ஊர் ஜமாஅத்தினர் பிரச்சனை செய்தார்கள்.

அல்லாஹுவின் கிருபையால் 05.03.2014 அனைத்து கிளைகளிலிருந்தும் கொள்கை சொந்தங்கள் வந்து மையத்தை நபிவழிப்படி அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அல்லாஹு அக்பர்.

இந்த பிரச்சனையில் மாவட்ட தலைவர் மற்றும் பரங்கிப்பேட்டை சார்ந்த பாஜல் உசேன் மற்றும் ஹாஜப்பா உள்பட நமது  6 கொள்கை சகோதரர்கள் தலை, முகம் கால் போன்றவற்றில் கடுமையான காயங்கள்.

அல்லாஹுவின் உதவியால் நலம் பெற்று வருகின்றார்கள். இவர்களின் உடல் சுகத்திற்கு துஆ செய்யுங்கள்.

இந்த சம்பவத்தில் நமது ஜமாஅத் தரப்பினர் மீது 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுயுள்ளது.

சத்தியம் நிச்சயம் வெல்லும்!!! 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More