தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 10, 2014

மோடி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அஞ்சமாட்டார்கள்!

ஏப்.10: கேள்வி : விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் காரணமாக மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?

-அப்துல் கபூர், சேலம்.

பதில் : விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். எனவே மோடி ஆட்சியை பிடித்தால் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால் முஸ்லிம்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படும். பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக வாழும் நிலை ஏற்படும்.

சமுதாயத்தைப் பற்றி அக் கரையில்லாமல் வாழ்ந்த பொறுப்பற்ற முஸ்லிம்கள் சமுதாய உணர்வு பெறுவார்கள். அபூஜஹில் வகையறாக்களின் அடக்கு முறை களுக்குப் பின்னால் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்ததுபோல் அக்கிரமத்தை விரும்பாத பெரும்பாலான இந்து சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும்.

சிறிய சமுதாயத்தை ஏன் நசுக்குகிறார்கள் என சிந்திக்கத் தலைப்பட்டு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொள்வார்கள்.

பாதிக்கப்படும் முஸ்லிம்கள் அறவழியில் போராட்டம் நடத்துவது நசுக்கப்பட்டால் இதனால் விரக்தி அடையும் மக்களில் ஐந்து விழுக்காடு மக்கள் ஜனநாயகம் அல்லாத வேறு பாதைக்குத் திரும்பினால், அவர்களை எந்த முஸ்லிம் தலைவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காவல்துறைக்கும் இராணு வத்திற்கும் அஞ்சாத நிலை ஏற்பட்டு சாகத் துணிந்த மக்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மோடி வகையாறாக்களுக்கு மூளை சிறிதளவாவது இருந்தால், இதுபோன்ற ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார்கள். குஜராத்தைப்போல் எல்லா முஸ்லிம்களும் இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த நடந்து கொள்வார்கள்.

மன்னராட்சி நடக்கும் கற்காலத்தில் நாம் வாழவில்லை. உலக நாடுகளை அனுசரித்து ஆட்சி நடத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். சிறுபான்மை மக்களை நசுக்கி அடக்கி ஒடுக்கும் ஆட்சி நடத்தினால், வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், அண்டை நாடுகளான முஸ்லிம் நாடுகளும், பொருளதாரத் தடை போன்ற நடவடிக்கை எடுப்பது நிச்சயம்.

அப்படி நடந்தால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நின்றுவிடும். மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் நினைத்துப் பார்க்க முடியாத நிலைமையை நாடு நிச்சயம் சந்திக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகனங்கள் ஓட முடியாது. மாட்டு வண்டியில் மோடி பாராளுமன்றம் செல்லும் நிலை ஏற்படும். ஓட்டுப்போட்ட மக்கள் எல்லாம் கற்காலத்து மக்களைப்போல் நவீன(?) வசதிகளுடன் வாழும் நிலை ஏற்படும்.

குஜராத் என்ற மாநிலத்தில் நடத்தப்பட்ட வெறியாட்டத்தை உலக நாடுகள் சாதாரணமாக எடுத்துக் கொண்டதுபோல் இந்திய அரசு நடந்துகொள்வதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கற்பனை செய்து பார்த்தாலே குலை நடுங்குகிறது.

தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட பன்மடங்கு உயர்ந்து நிற்கும் பெரும் பெட்ரோல் வளம் கொண்ட ஈரானால்கூட இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை.

ஈரானுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைவிட பலமடங்கு நெருக்கடிகள் பலநாடுகளால் ஏற்பட்டு, மோடி நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை.

1900களில் உருவாக்கப்பட்ட உளுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். கொள்கை நாட்டை அழித்து நாசமாக்கிவிட்டதை அப்போது மக்கள் உணர்வார்கள்.

எனவே இடஒதுக்கீடு போன்ற சில பிரச்சினைகளில் சில்லரைத்தனமாக நடக்க முடியுமே தவிர, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

ஒவ்வொரு விளைவுக்கும் எதிர்வினை உண்டு என்ற மோடியின் பொன்மொழி நமக்கும் பொருந்தக்கூடியதுதான். எனவே மோடியைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்ற தத்துவம் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஒரே நாடு, ஒரே இனம் ஒரே கலாச்சாரம் என்பதை இவர்கள் செயல்படுத்த விரும்பினால் இன்னும் கடுமையான விளைவுகளை நாடு சந்திக்கும்.

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. பிராமணக் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரின் கலாச்சாரமாக மாற்றும் இவர்களின் திட்டத்தை செயல்படுத்தினால், ஒவ்வொரு சாதியினரும் கொந்தளித்து எழுவார்கள். யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்பதற்காக கொலை விழும் நாட்டில் ஒரே கலாச்சாரத்தை செயல்படுத்த விரும்பினால், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

ஒரே இனம் என்பது இந்துக்களை மட்டுமே கொண்ட தேசம் என்பதாக நினைக்கமுடியாது. ஒரே மொழிதான் இருக்க வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களின் கொள்கை. தென்னிந்திய மொழி பேசும் மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படும்.


இந்தியாவின் ஆட்சி மொழி இந்திதான் என்று அரசியல் சாசனம் கூறுவதை எடுத்துக்காட்டி எல்லா மொழியையும் நசுக்குவார்கள். மாநிலங்களில் பிரிவினை முழக்கம் அதிகரிக்கும்.

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அனைத்து இந்துக்களுக்கும் ஒரே சட்டம் என்ற அர்த்தமும் இதில் அடங்கியிருக்கிறது.

திருமணம், அடக்கம் செய்தல், சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியன இந்துக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான வழிமுறைகள் உள்ளன.

அனைவருக்கும் பொதுசிவில் சட்டம் என்று பிராமணர்களுக்கான சட்டத்தை அனைவரும் மீதும் திணிக்க முயன்றால், நாடு சுடுகாடாகிவிடும்.இவர்களின் எல்லா கொள்கைகளும் நாட்டை சுடுகாடாக்கும் நாசகாரக் கொள்கைதான்.


எதையாவது பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு, வாஜ்பாய்போல் இன்னொரு காங்கிரஸாக இருந்தால் நல்லது.

அதைவிடுத்து சங்பரிவாரத்தின் கொள்கைகளை இந்திய மக்கள் மீது திணிக்க முயன்றால், அனைத்து சாதியினரும், அனைத்து மொழிபேசும் மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், மதச் சிறுபான்மை மக்களும் ஒரு சேர கொதித்து எழுந்தால், அதை யாராலும் அடக்க முடியாது.

எனவே மோடிக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை.

மோடியால் நாட்டுக்கு கேடுதான் ஏற்படும் என்பதை உணர்ந்து இந்துக்கள் அவரை புறக்கணித்தால் அதுவும் நல்லதுதான்.

மோடியை அரியணையில் ஏற்றினால், சங்பரிவாரத்தின் கொள்கைக்கு அத்தோடு, மரண அடி கொடுக்கப்படும் என்பதால் அதன் முடிவும் நன்மையாகத்தான் இருக்கும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More