தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 15, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு யாருக்கு?


திருச்சி,ஏப்.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.


செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொகுதிகள் ஆதரவு விபரம்:

சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் - விடுதலை சிறுத்தைகள் கட்சி

தென்காசி தொகுதி - புதிய தமிழகம் கட்சி

மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் - காங்கிரஸ் கட்சி

மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு!!!

விரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்!


2 comments:

TNTJ-வினர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு வெட்கப்பட வேண்டும். அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தந்தபோது மமக வேட்பாளரை எதிர்த்ததில் ஏதோ ஜனநாயக ரீதியில் நியாயம் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும், தற்போது மாற்று முடிவு எடுத்திருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் மமகவு ஆதரவு தரமால் இருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்துவீர்கள். பார்ப்பனராகிய மணிசங்கரைவிட மோசமானவரா ஹைதர் அலி. தயவு இந்த கமெண்டை அனுமதியுங்கள்.

ஸலாம்,

http://www.tntjpno.com/2014/04/blog-post_16.html

இந்த லிங்கில் உங்களுக்கு அழகிய பதில் இருக்கு படித்து தெரிந்துக்கொளுங்கள்.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More