தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 16, 2014

மயிலாடுதுறையில் மமக-வை ஏன் ஆதரிக்கவில்லை?!

ஏப்.16: மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (தமுமுக அரசியல் பிரிவு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை அளித்திருக்கலாமே என்று சமூக அக்கறையுடன் கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம்.
ததஜ அதிமுக வுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியதும்...
  • காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு வந்தது.
  • திமுக ஆதரவு கேட்டு வந்தது.
  • கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கேட்டு வந்தது.
  • திருமாவளவன் விசி கட்சிக்கு ஆதரவு கேட்டு வந்தார்கள்.
  • ஆம் ஆத்மி ஆதரவு கேட்டு வந்தது.
  • அதிமுக கட்சியின் இரண்டாம கட்ட தலைவர்கள் கூட வாபஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வந்தார்கள்.
ஆனால் மமக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆதரவு கேட்டு வந்ததா?
இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா அவர்கள் ததஜ தலைமைக்கு வந்து மயிலாடுதுறையில் மமகவுக்கு ஆதரவு தர வேண்டுமென்று மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.

ஹனீபாவுடைய கோரிக்கைக்கு ததஜ தரப்பில் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது, ஜனசாக்களை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது, தவ்ஹீத்வாதிகளுக்கு இடையூறு செய்தது, தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்வதற்கு துணை போனது போன்ற அநீதிகளுக்கு வருத்தம் தெரிவித்தும் மீண்டும் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் வாக்குறுதி கடிதம் தமுமுக- மமக தரப்பில் எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எங்கள் செயற்குழுவில் எடுத்து வைக்கிறோம் என்ற பதில் கொடுக்கப்பட்டது.

ததஜவின் நிர்வாகிகளிடத்தில் அப்போலோ ஹனிபா இதோ மமகவிடம் அத்தகைய கடிதம் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ததஜ அலுவலகத்தில் இருந்து கொண்டு தமுமுக தலைவர் ரிபாயி அவர்களுக்கு போன் செய்தார். 

ஆனால் ரிபாயி அவர்கள் அப்படியெல்லாம் கடிதம் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கிறோம் என்று ஹனீபா அவர்களுக்கு பதில் கொடுத்தார்.

தமுமுக இதுவரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதனுடைய தொண்டர்கள் விஷயத்தில் செய்த அநீதிகள் எல்லாம் சரிதான் என்பது போல் நடந்து கொண்டார்கள். விசிக தலைவர் திருமாவளவனும் ததஜ அலுவலகம் வந்து மமகவுக்கு ஆதரவு தரலாமே என்று கேட்டார். அவரிடமும் இதே நிபந்தனையை சொல்ல தான் சென்று அவர்களிடம் தகவல்களை எடுத்து சொல்லி விட்டு தொடர்பு கொள்கிறேன் என்று சென்றார். ஆனால் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான சகோதர சகோதரிகளே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனக்கும் தன்னுடைய தொண்டர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகளை எல்லாம் மறந்து தமுமுக- மமகவை ஆதரிக்கிறோம், ஆனால் அவர்கள் உறுதி மொழி கொடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்த உறுதிமொழியையும், வருத்தத்தையும் தமுமுக - மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படி நாங்கள் இவர்களை ஆதரிக்க முடியும்?

எங்களை இதன் தொடர்பில் விமர்சனம் செய்பவர்களே, அல்லாஹ்விற்கு பயந்து உங்களுடைய விமர்சனங்களை இதன் தொடர்பில் வைக்கவும். உங்களுடைய முகநூல் பக்கங்களிலும் இந்த உண்மையை எடுத்து சொல்லுங்கள்.

எழுத்து - Ibnu Halima. ஜஸாக்கல்லாஹ்.

நன்றி: முஹம்மது ஷேக் - முகநூல்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More