தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 23, 2014

தினமும் செய்ய வேண்டிய அமல்கள்!

ஏப்.23: இரவில் உறங்கச் செல்வதிலிருந்து மறுநாள் உறங்கச் செல்கின்ற வரை மனிதன் இன்னின்ன காரியங்களை செய்ய வேண்டும் என்றும், சில காரியங்களை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
 
அவ்வாறு செயல்படுத்துவதால் நம்முடைய அன்றை நாட்கள் சிறப்பானதாகவும், மனநிம்மதியளிக்க கூடியதாகவும் அமைந்து விடுகிறது.
இனி படுக்கச் செல்வதிலிருந்து மீண்டும் மறுநாள: படுக்கைக்குச் செல்கின்ற வரை எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை வரிசையாக பார்ப்போம்.
இரவு சீக்கரமே படுக்கைக்குச் செல்லுதல்:
பகல் முழுவதும் வேலைபார்த்துவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லக்கூடிய நேரம் 12 மணி அல்லது ஒரு மணி ஆகிவிடுகிறது. இவ்வாறு நேரம் கடந்து தூங்குவதால் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு சுப்ஹ் தொழுகையை தவறிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு அதன் இறுதிப் பகுதியில் விழித்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1347
தூங்குவதற்கு முன் உளூ செய்தல்:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள்.
அறிவிப்பவர்:  பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரீ 27
விரிப்பை, படுக்கும் பெட்டை உதறிவிடுதல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 6320
தூங்குவதற்கு முன் கதவை மூடுதல், பாத்திரத்தை மூடுதல், விளக்கை அணைத்தல்:
(இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து  விடு.(அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
அறிவிப்பவர் :  ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 3280

- எம்.எம்.ஸைபுல்லாஹ், கடையநல்லூர்

நன்றி: தீண்குலப் பெண்மனி  

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More