தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 01, 2014

பாண்டிச்சேரியில் TNTJ தேர்தல் நிலைப்பாடு!

ஏப்.01: யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் டிஎன்டிஜேயின் தேர்தல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் சமுதாயத்தின் நன்மையைக் கவனத்தில் கொண்டு ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்து வருகிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித்தருவதற்கு ஆணையம் அமைத்த அதிமுகவை ஆதரிக்கும் முடிவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது.

ஆனால் புதுவையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக எந்தக் கட்சியும் ஒரு முயற்சியும் செய்யாத காரணத்தால் புதுவை நாடளுமன்றத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று மாநில நிர்வாகமும், புதுவை, காரைக்கால் நிர்வாகமும் சேர்ந்து இம்முடிவை எடுத்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தமது மனசாட்சியின் படி பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தவிர மற்ற எந்த வேட்பாளருக்கும் வாக்களித்துக் கொள்ளலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரையும், கொடியையும் பயன்படுத்தி எந்த தேர்தல் பணியையும் செய்யக்கூடாது.
மேலும் தவ்ஹீத் ஜமாஅத் கிளை மாவட்ட நிர்வாகிகள் எந்த வேட்பாளர்களுக்கும் தேர்தல் பணியாற்றக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
மாநிலத்தலைமையகம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More