தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 20, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு நிகழ்ச்சி!


பரங்கிப்பேட்டை, மே.20: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக சென்ற 10.05.2014 முதல் 19.05.2014 சிறுவர், சிறுமியர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை மர்கஸில் நடைபெற்றது.

இதில் சுமார் 100 பிள்ளைகள் கலந்துக்கொண்டனர். இவர்களுக்கு தினமும் துஆக்கள், சூராக்ககள்  மனனம், தொழுகை பயிற்சி, உன்னும் முதல் உறங்கும் வரை உள்ள ஒழுங்குகள், நபி(ஸல்) வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டது.

இதன் நிறைவுவாக நேற்று (19.05.2014) அன்று காலை 10.00 மணியளவில் பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட துணை தலைவர் சகோ.ஆடுர் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்றுள்ள சூராக்கள், துஆக்கள் ஆகியவற்றை நிகழ்ச்சியில் ஒதி காண்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

8 சிறப்பு பரிசுகளும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் 92 ஆறுதல் பரிசும் சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்பட்டது. 

இதில் திரளான பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதற்க்காக பொருளாதார உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.










































0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More