தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 04, 2014

கருணாநிதிக்கு கண்டனம்!

சென்னை, மே.04: சென்னை செண்டரல் குண்டு வெடிப்பில் முஸ்லிம்கள் மீது பழிபோட்ட கருணாநிதிக்கு கண்டனம்!

சென்னை குண்டு வெடிப்பு விவகாரத்தில் கருணாநிதி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னையில் பிடிபட்ட ஜாஹீர் உசேன் என்ற ஐ.எஸ்.ஐ. உளவாளியை முறையாக விசாரித்திருந்தால் இந்த குண்டு வெடிப்பை தடுத்திருந்திருக்கலாம் என்று சொல்லி விஷம் கக்கி இருக்கின்றார்.

குண்டு வைத்தது யார் என்று இதுவரை துப்பு துலக்கப்படாத நிலையில் விசாரணைக்கு முன்னதாகவே குண்டு வைத்தது முஸ்லிம்கள் தான் என்று தீர்ப்பு எழுதிய கருணாநிதியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.

இந்தியாவில் நடந்த பெருவாரியான குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் காவி பயங்கரவாதிகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் மேல் சந்தேகம் எழுப்பாத கருணாநிதி, முஸ்லிம்கள் மீது பழிபோட முயற்சித்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதமும்; இஸ்லாமிய சமுதாயத்திற்கு செய்துள்ள மிகப்பெரும் துரோகமும் ஆகும்.

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்திருந்து, இதுபோன்றதொரு பழியை முஸ்லிம்கள் மீது அவர் அப்போது போட்டிருந்திருப்பாரேயானால் இந்த அறிக்கை ஒன்றே முஸ்லிம்கள் கருணாநிதியை கைகழுவவும், அவரை தோற்கடிக்கவும் காரணமாக அமைந்திருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை நமக்கு ஆதரவாக முஸ்லிம்கள் அளித்துவிட்டார்கள்; இனி நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில்தான் கருணாநிதி அவர்களின் இந்த பழிபோடும் செயலை முஸ்லிம் சமுதாயம் பார்க்கின்றது. இன்னும் சில வருடங்களில் சட்ட மன்றத் தேர்தல் வரவுள்ளது என்பதை கருணாநிதிக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

இதற்கு முன்னதாக முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்த கருணாநிதி திருந்திவிட்டார் என்று நினைத்தோம்; ஆனால் நான் இன்னும் திருந்தவில்லை; இன்னும் முஸ்லிம்களை கோவை கலவரத்தில் கருவறுத்த அதே கருணாநிதியாகத்தான் இருக்கின்றேன் என்று தனது அறிக்கை மூலம் நிரூபித்துள்ளார்.

இது தொடர்ந்தால் திமுகவிற்கு மரண அடி கொடுக்க முஸ்லிம் சமுதாயம் தயங்காது என்பதை எச்சரிக்கிறது இன்றைய தினம் ஒரு தகவல்...

குறிப்பு:

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்த இன்னபிற முஸ்லிம் இயக்கங்களும் கருணாநிதியின் இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தை உடனே பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த இயக்கங்களுக்கும் இவர் ஆப்பு அடித்துவிடுவார் என்று எச்சரிக்கின்றோம்.

(தினம் ஒரு தகவல் 04.05.2014)

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More