தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 27, 2014

“ரமலானை வரேற்ப்போம்” தெருமுனை பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.27: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்று (27.06.2014) மஃரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக சின்னக்கடை தெரு முனை பெரியதெரு முனை கும்மத்துப்பள்ளி தெரு ஹாக்கசாஹிப் தெரு  ஆகிய பகுதியில் மெகாபோன் மூலம் பிரச்சாரம் “ரமலானை வரேற்ப்போம்” என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோ.செங்கம் ஷாகித் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த உரையில் நோன்பின் நோக்கம் ரமலான் மாதத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள், இபாதத்க்கள், நோன்பில் செய்யக்கூடாதவை ஆகியவற்றை பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

சின்னக்கடை பகுதியில் பிறமத சகோதரர்கள் இஸ்லாம் பற்றி அறியும் வண்ணம் உரை நிகழ்த்தியது சிறப்பாக அமைந்தது.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!











0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More