தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 20, 2014

மீண்டும் ஒர் சூனிய ஒப்பந்தம்!

சென்னை, ஆக.20: 20.08.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் அவர்களுக்கும் டி.என்.டி.ஜே-விற்கும் இடையே நடைபெற்ற சூனியம் குறித்த ஒப்பந்தத்தின் விபரம்

(இது குறித்து இன்று பேசப்பட்ட தினம் ஒரு தகவல் வீடியோவைக் காண  https://www.facebook.com/photo.php?v=839419086077107&saved )

சூனிய ஒப்பந்தம் - 1

சூனிய ஒப்பந்தம் - 2



நாளை 21.08.14 வியாழக்கிழமை முதல் சரியாக 144 நாட்களுக்குள் (மூன்று மண்டலங்களுக்குள், அதாவது 1மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும்) வரக்கூடிய 2015 ஜனவரி 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொறுப்பில் உள்ள கீழ்க்கண்ட ஐந்து நபர்களுக்கு கீழ்க்குறிப்பிட்ட பாதிப்புகளை சூனியத்தின் மூலம் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
  • பீ.ஜைனுல் ஆபிதீன் சூனியத்தின் மூலம் ஊமையாக்கப்படுவார் என்றும்,
  • எம்.எஸ்.சையது இப்ராஹீம் சூனியத்தின் மூலம் இரண்டு கண்களும் குருடாக ஆக்கப்படுவார் என்றும்,
  • கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் சூனியத்தின் மூலம் கோமா நிலைக்கு ஆளாக்கப்படுவார் என்றும்,
  • எம்.ஐ.சுலைமான் சூனியத்தின் மூலம் புத்தி சுவாதீனமின்றி ஆடையின்றி அலையச் செய்யப்படுவார் என்றும்,
  • எஸ்.கலீல் ரசூல் சூனியத்தின் மூலம் இடது கை மற்றும் கால் செயலிழந்து முடமாக்கப்படுவார் என்றும் 

- அத்லு எஸ்.கே.தீன் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்பந்தம் செய்கிறார்.

மேற்குறிப்பிட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று குறிக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதுவும் ஏற்பட்டால் அது சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.

மேற்குறிப்பிட்டுள்ள விளைவுகள் விபத்து, தாக்குதல் போன்றவற்றால் ஏற்பட்டால் அதுவும் சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.

சூனியம் செய்வதற்குத் தேவையான பொருட்களும், (வேர்வைபட்ட உள்ளாடை, முடி, நகம், சிறுநீர்) கேட்டுக்கொண்ட விபரங்களும் (பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, அலை பேசி எண்) அத்லு எஸ்.கே.தீனிடம் வழங்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் அமைக்கப்படும் மேடையில் அத்லு எஸ்.கே.தீனும் மேற்கண்ட ஐவரும் தோன்றுவர். அப்போது

1. பீ.ஜைனுல் ஆபிதீன் சலாம் கூட சொல்ல முடியாது.

2. எம்.எஸ்.சையது இப்ராஹீம் – இரண்டு கண்களும் தெரியாத குருடராக இருப்பார்.

3. கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோமா நிலையில் ஸ்ட்ரக்சரில் தூக்கி வரப்படுவார்.

4.எம்.ஐ.சுலைமான் ஆடையின்றி நிர்வாணமாக புத்தி சுவாதீனமில்லாதவராக அழைத்து வரப்படுவார். (மற்றவர்கள் அவருக்கு ஆடை போர்த்தி அழைத்து வருவர்.)

5. எஸ்.கலீல் ரசூல் இடது கை, கால் முடமாகி அழைத்து வரப்படுவார்.

அன்றைய தினம் மேற்குறிப்பிட்ட ஐவருக்கும் குறிப்பிட்ட பாதிப்பு சூனியத்தால் ஏற்படுத்தப்பட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்லு எஸ்.கே.தீனுக்கு அதே மேடையில் ரூபாய் 50 லட்சம் வழங்கும்.

அன்றைய தினம் மேற்கண்ட ஐந்து நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட வகையிலான பாதிப்புகள் ஏற்படாவிட்டால் சூனியம் என்பது பொய் என்பதை அத்லு எஸ்.கே.தீன் ஒப்புக்கொண்டு அதே மேடையில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து தவ்பா செய்து கலிமா சொல்லி சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பாரும் முழுமனதோடும், புத்தி சுவாதீனத்தோடும் எவ்வித நிர்பந்தமுமின்றி எழுதிக்கொண்ட ஒப்பந்தமாகும்.

குறிப்பு: சூனிய ஒப்பந்த முழு வீடியோ விரைவில் இன்ஷாஅல்லாஹ்...

சூனியகாரர்களின் முகத்திரையை கிழிக்க காத்திருங்கள் (இன்ஷாஅல்லாஹ்) இன்னும் 144 நாட்கள்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More