தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 26, 2014

பரங்கிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆலோசனை கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஆக.26: பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று (26.08.2014) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள தரப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் அழைக்கபட்டிருந்தன.

காவல்துறை சார்பில் அனைவரும் அமரும் விதத்தில் நாற்காலி போடபட்டிருந்தன. வந்திருந்தவர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது. 


மாலை 7 மணியளவில் கூட்டம் தொடங்கியது கூட்டத்தை தொடங்கி வைத்து DSP பேசுகையில் விநாயகர் ஊர்வலம் பக்திக்காக செய்யவேண்டும் அதில் சினிமா பாடல்கள் ஒழிக்க கூடாது. 

கண்டிப்பாக மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள கூடாது.  

தேவை இல்லாத வார்த்தைகள் அடங்கிய டீ ஷர்ட் அணிந்து செல்லக்கூடாது 

குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விட வேண்டும். 

மீராப்பள்ளி அருகே செல்லும்போது வாத்தியங்கள் இசைக்காமல் அமைதியாக செல்ல வேண்டும். 

இதுவரை நடைபெற்ற ஊர்வலங்களில் முஸ்லிம்கள் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக மாற்று ஊர்காரர்களுக்கு உதாரணமாக திகழ்வது எனக்கு சந்தோசமாக உள்ளது. 

யாருக்கு எந்த பிரச்சனையை என்றாலும் நேரடியாக பிரச்சனை செய்து கொள்ள கூடாது அங்கிருக்கும் காவல்துறை நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

DSP அவர்களின் பேச்சு மத சார்பற்ற இந்தியா என்பதை உணர வைத்தது. 

வந்திருந்த முஸ்லிம், இந்து சகோதரர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் விரோதம் இல்லாமல் நட்போடு சந்தோசமாக பேசி கொண்டது காவல்துறையினரை மகிழ்ச்சியுற செய்தது.

போட்டோ: 

DSP அவர்களுடன் பரங்கிபேட்டை TNTJ நகர தலைவர் சகோதரர் A அமானுதீன் 


இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சகோதரர் ஹமீது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள். 


பரங்கிபேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சகோதரர் முஹம்மது யூனுஸ் 

துணை தலைவர் சகோதரர் நடராஜன் அவர்களுடன்.

- முத்துராஜா


நன்றி: Mr PNO - வலம்புரி சங்கு (முகநூல் பக்கம்)

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More