தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 29, 2014

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு!

ஆக.29: சூனியத்தின் மூலம் யார் மீது வேண்டுமானாலும், எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்று சொல்வது பொய். சூனியம் என்பதே ஒரு ஏமாற்று வேலை; அப்படி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது உண்மை என்றால் என் மீது தாக்கத்தை ஏற்படுத்திக்காட்டுங்கள் பார்ப்போம் என்று சகோதரர் பீஜே அவர்கள் விட்ட சூனிய சவாலைத் தொடர்ந்து சூனியக்காரர்களுக்கு பீதி ஏற்பட்டது போல சூனியத்தை ஆதரிக்கக்கூடியவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டது.

இதனால் வயிற்றெரிச்சலுக்கு ஆளான சூனிய ஆதரவாளர்கள் இந்த சவாலை முறியடிக்க பல பொய்யான அவதூறுகளை பரப்பி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க பல்வேறு சூழ்ச்சிகளில் இறங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் மீது பல பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இந்த ஜமாஅத்தின் நிர்வாகிகள் ஏதேனும் தவறு செய்தால் அதை பரப்பத் தேவையில்லை; காரணம் என்னவென்றால் யார் மீது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டாலும் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் என்று யாராவது ஒருவர் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க பொறுப்பேற்றுக் கொள்வாரேயானால் உடனடியாக அந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகக் குழு தயங்காது. குற்றம் சுமத்தப்படுபவர் எந்த உயர்பொறுப்பில் இருந்தாலும் சரியே!
அப்படிப்பட்ட ஜமாஅத்தாக இந்த ஜமாஅத் இருக்கும் நிலையில் பொய்யான அவதூறுகளை பரப்புவது சரியல்ல; இதற்கென்றே பல இயக்கங்கள் உள்ளன. பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களை தேர்வு செய்து தேசிய தலைவர் என்பதும், அப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு துணை புரிந்தவர்களுக்கு மாநில நிர்வாகி பதவி வழங்குவதும், அதுபோன்ற மோசமான தரங்கெட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகி பதவி வழங்குவது என்பன போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் இயக்கமாக இருந்தால் அவர்கள் நிச்சயம் அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால் இதுபோன்ற செய்திகளை அவர்கள் பரப்புவது நியாயமாக இருக்கலாம்.
ஆனால் இந்த ஜமாஅத் அப்படிப்பட்ட ஜமாஅத் அல்ல. திருடியவள் எனது மகள் பாத்திமாவாக இருந்தாலும் அவளது கையை நான் வெட்டுவேன் என்று அறிவிப்புச் செய்த உத்தமத்தூதர் வழியில் வார்த்தெடுக்கப்பட்ட ஜமாஅத் தான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
அந்த அடிப்படையில்தான் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த பாக்கர் என்பவர் மீதான பாலியல் புகார் குறித்து வந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அது உண்மை என்று ஆதாரங்களுடன் தெரிய வந்தபோது அவர் மீது இந்த ஜமாஅத் அதிரடியாக நடவடிக்கை எடுத்து அவரை தூக்கி எறிந்தது.
இப்போது மாநில நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு இதையே பதிலாகச் சொல்லிக் கொள்கின்றோம். யார் மீது என்ன குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தாலும் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று குற்றச்சாட்டு சொல்லக்கூடியவர்களில் யாராவது ஒருவர் பொறுப்பேற்று அந்த குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாக புகாராக எழுதி தலைமைக்கு அனுப்பினால் மாநில நிர்வாகக்குழு உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் இத்தகைய பொய்களை பரப்புபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும். அவர்கள் பரப்பும் பொய்கள் உண்மையாக இருக்குமேயானால் அதை நிரூபிக்க முன்வரட்டும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில நிர்வாகம்

http://www.tntj.net/268178.html

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More