தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 19, 2014

பொதுக்குழு - நிர்வாகிகள் தேர்வு!

பரங்கிப்பேட்டை, அக்.19: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் பொதுக்குழு இன்று (19.10.2014) மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் தலைமையில் காலை 10.30 மணியளவில் TNTJ  மர்கஸில் நடைபெற்றது.

முதலில் ”மறுமை வெற்றி” என்ற தலைப்பில் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: KR.முஹம்மது அக்ரம் 

செயலாளர்: Y.ஜாக்கிர் ஹுசைன் 

பொருளாளர்: M.பாஷா 

துணை தலைவர்: M.ஹாஜா மொய்தீன் 

துணை செயலாளர்: K.காதர் அலி (நபீஸ்) 

தொண்டரணி செயலாளர்: M.சுக்கூர் அலி 

மாணவரணி செயலாளர்: MH.அப்துர் ரஹ்மான் 

மருத்துவரணி செயலாளர்: M.ஹபிபுர் ரஹ்மான் 

மேற்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்...

மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு நேரில் சென்று பிறமத சகோதர சகோதரிகளை சந்தித்து தாவா செய்வது.

மார்க்க மற்றும் சமுதாய பணிகளை வீரியத்துடன் பரங்கிபேட்டையில் செயல்படுத்துவது எனவும் தீர்மானிக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்! 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More