தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 29, 2014

பிறமத சகோதரிக்கு குடிசை வீடு!

பரங்கிப்பேட்டை, அக்.29: தொடர் மழையின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டு மூன்று பெண் பிள்ளைகளை வைத்துகொண்டு படுக்க கூட வழியில்லாமல் கஷ்ப்பட்ட வந்த கனவனை இழந்த மீனா என்கிற பிறமத சகோதரிக்கு 27.10.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக ரூபாய்.15,000/- மதிப்பில் புதிய குடிசை வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பிறருக்கு உதவு:
சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் ‪#‎இஸ்லாம்‬ போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு‬ உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

இஸ்லாம் ‪ மனிதநேயம்‬ மிக்க மார்க்கம்...

தினமலர் செய்தி - 28.10.2014 - 1

தினமலர் செய்தி - 28.10.2014 - 2

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More