தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 30, 2014

TNTJ மாணவரனி நடத்தும் ”தீவிரவாத எதிர்ப்பு” கட்டுரை போட்டி!

சென்னை, அக்.30: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நடத்தும் தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை போட்டிக்கான விதிமுறைகளும் மற்றும் அழைப்பிதழ்.

பெறுநர்:
மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள்,
-------- கல்லூரி / பள்ளி
.................மாவட்டம்.

‪#‎பொருள்‬ : மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கக் கோரி விண்ணப்பம்.
அன்புள்ள கல்லூரி/பள்ளி முதல்வர் அவர்களுக்கு, தங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அதில் சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாய்த் திகழ்வது நம் பாரதம் என்பது புலப்படும். பல மதத்தவர்களும், இனத்தவர்களும் தாயும் பிள்ளையுமாக பழகி வரும் இந்திய தேசத்தின் பண்பாட்டுக்கு எதிராக இன்று வல்லூறாய் வளர்ந்திருக்கிறது இஸ்லாமிய வெறுப்புணர்வு.

சாதிய பாகுபாடுகளை அகற்றி, நாடு கடந்த, மொழி கடந்த சகோதரத்துவத்தை பேணி வளர்த்த பெருமை சாந்தி மார்க்கமாம் இஸ்லாத்திற்கு உண்டு என்றால் அது மிகையல்ல.
”ஓர் உயிரை நீ கொலை செய்தால் ஒட்டுமொத்த மாந்தரையும் கொன்ற பாவியாவாய்” என்று போதித்த இம்மார்க்கம் குறித்து இஸ்லாமியர் அல்லாதவர்களிடையே இன்று ஏற்பட்டுள்ள எதிர்மறை எண்ணங்கள் கவலையளிப்பதாக இருக்கிறது.

இஸ்லாம் என்றாலே வன்முறையை போதிக்கும் மார்க்கம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற தவறான கருத்து, பரவலான மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. வெறும் பெயரளவில் மட்டும் இஸ்லாமியர்கள் என்று பறைசாற்றி கொள்ளும் ஒரு சில முஸ்லிம்களின் தவறுக்காக, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பொய்யை விற்று காசாக்கும் கலையை கற்ற ஊடகங்களும் அதற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தண்ணீரில் பாசி படிந்துவிட்டது என்பதற்காக அதை அப்படியே விட்டு விடக்கூடாதல்லவா? ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் கூட்டுக்குடும்பம் நடத்துவதுதான் சாத்தியமா?

பொதுப்பாதையில் கிடக்கும் கல்லை அகற்றும் அடியானுக்கு புண்ணியம் உண்டு என்று போதித்து பொதுநலம் பேணும் இஸ்லாமிய கொள்கை ஒருபோதும் தீவிரவாதத்தை தருவிப்பதில்லை, பயங்கரவாதத்தை பயிர் செய்வதில்லை என்பதையும், மனித குலத்தின் மாண்புக்கும், நேயத்துக்கும் அளப்பரிய பங்களிப்பை செய்திருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி, பிற மதத்தவர்களிடையே இருக்கின்ற கசப்புணர்வை நீக்கி பந்தம் வளர்க்க வேண்டியது எம் கடமை எனக் கருதுகிறோம்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே நாளைய இந்தியாவாக விளங்கும் இளைஞர்களிடையே பின்வரும் தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசளிப்பு செய்யலாம் என எண்ணுகிறோம். இந்த உயர்ந்த நோக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கி சான்றோர் இனத்தவராம் தாங்கள், இப்போட்டியில் மாணவர்களை பங்குபெற ஊக்கஞ்செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன் கட்டுரை போட்டிக்கான விதிமுறைகளை இணைத்துள்ளோம் இவற்றை மாணவர்களின் பார்வைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
கிளை மாணவரணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கல்லூரி மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான
கட்டுரைப் போட்டி

கட்டுரைக்கான ‪#‎தலைப்புகள்‬
1) இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?
2) இஸ்லாம் கூறும் மனிதநேயம்
3) இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு

முதல் பரிசு 15,000/- ரூபாய்
இரண்டாம் பரிசு 10,000/- ரூபாய்
மூன்றாம் பரிசு 5,000/- ரூபாய்

மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம்.

இரண்டு பக்கங்களுக்கு (A4) குறையாமல் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15 , 2014 கட்டுரை எழுதுபவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இணைத்து அனுப்பவும்.

உங்கள் கல்லூரியின் பெயர், நீங்கள் படிக்கும் வருடம் , பாடப்பிரிவை (B.Sc,B.A,etc) குறிப்பிட்டு அனுப்பவும்.

தமிழக அளவிலான இக்கட்டுரைப் போட்டியில் போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்படும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை போட்டி
மாநில மாணவரணி செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
மாநில தலைமையகம்
No 25, அரண்மணைக்காரன் தெரு,
மண்ணடி , சென்னை – 600 001

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More