தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 11, 2015

70 நபர்கள் கலந்துக்கொண்ட ”இரத்த வகை கண்டறியும்” முகாம்!

பரங்கிப்பேட்டை, ஜன.11: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் மருத்துவ சேவை அணி‬ சார்பாக இன்று (11.01.2015) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை இரத்த_வகை‬ கண்டறியும் முகாம் சலங்கார தெரு துவக்கப்பள்ளியில் மாவட்ட துனை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் தலைமையிலும் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமில் 70 நபர்கள் பிறமத சகோதர சகோதரிகள் உள்பட கலந்து கொண்டு இரத்த வகை பரிசோதித்து கொண்டனர். மேலும், இரத்ததானம்‬ செய்ய ஏதுவாக தங்கள் பெயர்களையும் பதிவு செய்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More