தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 29, 2015

‪ஒற்றுமையின் சுவை‬ உணர்வார்களா ஆட்சியாளர்கள்?

ஜன.29: ஒரு இஸ்லாமிய‬ பெண் பர்தா அணிந்த நிலையில் தனது வீட்டுக் கதவினைத் திறக்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான இந்து தம்பதியர் வீட்டு சாவிக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது அவர்கள் வெளியில் நிற்பதை பார்க்கும் இஸ்லாமிய பெண் அவர்களை வீட்டு சாவி வரும் வரை தனது வீட்டில் வந்து அமரும்படி அழைக்கிறார்.

முதலில் தர்ம சங்கடமாக மறுக்கும் அந்த வயதான தம்பதியர்மூட்டு வலியை நினைவு கொண்டு அந்த இஸ்லாமிய பெண்ணின் வீட்டில் வந்து அமர்கின்றனர், உபசரிக்கும் நோக்கில் அவர்களுக்கு அந்த இஸ்லாமிய பெண் தேனீர் வழங்குகிறார்.

தேனீரின் சுவையை ருசித்த அந்த இந்து பெரியவர் இன்னொரு கப் கிடைக்குமா என்று கேட்க நிச்சயமாக கிடைக்கும் என அந்த பெண் கூறுகின்றார் அப்போது ஒற்றுமையின் சுவை எனும் முழக்கத்துடன் எழுத்தும் போடப்படுகின்றது.ஆம் சமீபத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் த்ரி ரோஸ்ஸ் டீ‬ தூள் விளம்பரப் படம்தான் அது விஸ்வரூபம் என்றும் துப்பாக்கி என்றும் இஸ்லாமியர்களை தேசத்துரோகிகளாக சித்தரிக்கின்ற காலத்தில் இஸ்லாமியர்கள் அண்டை வீட்டுக் காரர்களுக்கு கூட நல் உபகாரம் செய்யக்கூடியவர்கள்தான் என்று மிக தைரியமாக விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டிருப்பது ஆயிரம் கப் த்ரி ரோஸஸ் டீ அருந்திய புத்துணர்வை வழங்கியுள்ளது.

எனக்கும் ஒரு கப் கிடைக்குமா என ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கேட்க நிச்சயம் கிடைக்குமென அவருக்கும் ஒரு கப் வழங்குவது போல காட்டீருந்தால் ஒற்றுமையின் சுவை இன்னும் கூடியிருக்கும் இந்து முஸ்லிம் கிறிஸ்துவ மக்களின் ஒற்றுமை த்ரி ரோஸ்ஸ போல மும்மலர்களாக மலர்ந்திருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை‬ என்பதே இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை இந்த வலிமையை ஒரு டீத்தூள் நிறுவனம் உண்ர்ந்த அளவிற்குக் கூட டீ விற்று செண்டரின் அபிமானத்தை அடைந்த இந்திய பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உணரவில்லை. 


இந்தியன் என்றால் இந்து என்று அர்த்தம் என்பது தாஜ்மகால் கட்டிடம் சிவன் கோயில் மீது கட்டப்பட்டது என்பது ஹிந்தி மொழியையும் சமஸ்கிருதத்தையும் வலுக்கட்டாயப் பாடத்திட்டமாக்க முயல்வது இந்துத்துவா சிந்தனையுள்ளவர்கள் தவிர மற்றவர்க்ள் தவறாக பிறந்தவர்கள் என்பது இத்தனை கொடூரச் சிந்தனைகளும் விஷக்கருத்துக்களும் கொண்டவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஆட்சி புரியும் நேரத்தில் த்ரி ரோஸஸ் விளம்பரம் ஒரு ஆறுதலான விஷயமாகும்.


அது விளம்பரம் ஒரு ஆறுதலான விஷயமாகும் அது விளம்பரமல்ல விருதுக்கு தகுதியான குறும்படம் ஆயுதங்களின் வலிமையைவிட வாக்குகளின் வலிமை மிகப் பெரியது என காஷ்மீரில் கொக்கரிக்கும் மோடி அதனை விட வலிமையான நாக்கு என்னும் ஆயுதத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு ஒரு வரை முறையை தமது கட்சிகாரர்களுக்கு ஏற்படுத்துவது காட்டாயமாகும் தவறினால் மக்கள் ஆட்சியை மற்றவர்களிடம் வை பா.ஜா.க வே நீ கோ என்பார்கள் வைகோவிற்குக்கூட தர்ம நேரடியாகப் பதம் பார்க்கப்பட்டதற்குப் பிறகுதான் ஆப்பிள் ஆழம் தெரிந்திருக்கின்றது.

நன்றி: ‪‎உணர்வு‬ வார இதழ்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More