தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 24, 2015

‪‎கோடைக்கால‬ பயிற்சி முகாம் - ‪‎பரிசளிப்பு‬ நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை, மே.24: அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக சென்ற 02.05.2015 முதல் 12.05.2015 வரை மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய அடிப்படைகள்,ஒழு செய்யும் பயிற்சி, தொழுகை பயிற்சி, துஆக்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய வரலாறுகள் மற்றும் பேச்சுப் பயிற்சி போன்றவைகள் கற்பிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 86 மாணவிகள், 60 மாணவர்கள் உள்பட மொத்தம் 146 நபர்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதன் முத்தாய்ப்பாக கடந்த 13.05.2015 ‪இஸ்லாமிய கண்காட்சி‬ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
”இதன் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (24.05.2015) காலை 9.00 மணியளவில் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் மாவட்ட துனை செயலாளர் சகோ.தாஜ்த்தீன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சகோ.அஷ்ரப் அலி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் அவர்கள் “மறுமை கல்வியும், முஸ்லிம்களின் அலட்சியமும் என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள் மற்றும் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “குர்ஆன் வழியில் நடப்போம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.”
கோடைக்கால பயிற்சி முகாமில் சிறப்பாக பயின்ற மாணவ, மாணவியர்களுக்கும், கலந்துக்கொண்ட அனைவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் மற்றும் சான்றுயிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக ஒத்துழைப்புயளித்த ஆசியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்துயிருந்தனர்.

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்துக்கொண்டனர்.

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More